மோட்டார் போக்குவரத்து

திணைக்களத்தின் கூற்றுப்படி, சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இந்தப் பயிற்சிப் பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க, தனது உள்ளக கணக்கெடுப்பின்படி நாடளாவிய ரீதியில் 1,500 சாரதி பயிற்சி பாடசாலைகள் இயங்கி வருவதாகவும் அதில் 600 சாரதி பயிற்சி பாடசாலைகள் மாத்திரமே சட்டரீதியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதியுடன் இயங்குவதாகவும் தெரிவித்தார்.
 
கடந்த காலங்களில் ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தாங்களாகவே சாரதி பயிற்சி பாடசாலைகளை ஆரம்பித்து அவற்றை நடத்தி வருவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி