10 வருடங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை
துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 10 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
35 வயதுடைய குறித்த நபர் வீட்டுக்கு அருகிலுள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெத்தபண்டிகே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இது தவிர, குற்றவாளிக்கு 10,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இவற்றை செலுத்தாவிட்டால் மேலும் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.