பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான, துபாயில் தலைமறைவாகி, இந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்லும் அஹுங்கல லொக்கு பெட்டியின் பிரதான சகா மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிடையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்களிடமிருந்த 30  கோடி ரூபா  பெறுமதியான போதைப்பொருள் மற்றும்  இரண்டு கைத்துப்பாக்கிகள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

 கெஸ்பேவ, கஹ்ல கஹவத்த வீதி பகுதியில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரவில, பாதுக்க மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசங்களில் வசிக்கும் 24, 28 மற்றும் 48 வயதுடைய  மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் முப்பது கோடிரூபா  பெறுமதியான போதைப்பொருள் 9 எம்எம்  ரக பிஸ்டல், மைக்ரோ பிஸ்டல், இரண்டு   மகசீன்கள்,  2 கார்கள் என்பன  இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....