ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின்

பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 120 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே இந்த நிதிவழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் நான்கு எம்.பி.க்களுக்கு 17 கோடி ரூபா வழங்க காத்திருப்போர் பட்டியல் இருப்பதும் தெரிந்ததே.

பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்த ஹேஷான் ஜயவர்தன, அஜித் மான்னப்பெரும, திலீப் வெதஆராச்சி, பைசல் காசிம், கயந்த கருணாதிலக, எச். எம். எம். ஹரீஸ், ஹர்ஷ டி சில்வா, ஹெக்டர் அப்புஹாமி, இஷாக் ரஹ்மான், ஜே. சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய் பெரேரா, கின்ஸ் நெல்சன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரோஹினி குமாரி விஜேரத்ன, செய்யத் அலி ஸாகிர் மௌலானா, வேலுகுமார், டபிள்யூ. எச். எம். தர்மசேன மற்றும் ரிஷாத் பதியுதீன்.

2024 ஆம் ஆண்டுக்கான பரவலாக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு மேலதிகமாக, நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

list

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி