இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ‘விதுலா’ சிறுவர்

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவிருந்த இந்துனில் ஜயவர்தனவின் மர்ம மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரது சடலம் கடந்த 4ஆம் திகதி காலை மோதர கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது.

அவரது சடலம் கண்டெடுக்கப்படும்போது அவர் ரீ சேர்ட் டெனிம் மற்றும் பெல்ட் அணிந்திருந்ததாக மோதர பொலிஸார் பேச்சாளர் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிலியந்தலை முகவரியின் அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து அவரது மனைவி அங்கு வந்து உடலை அடையாளம் காட்டினார்.

ஜூன் 3ஆம் திகதி தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பிறகு அவரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் மனைவி கூறியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அவர் சிலரால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வாழ்க்கையில் விரக்தியடைந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதர பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.ஜி.எஸ்.ஆர். சஞ்சீவாவின் அறிவுறுத்தலின்பேரில் சிறு முறைப்பாட்டு பிரிவு அதிகாரி சப் இன்ஸ்பெக்டர் ஜே.பி.எல். அநுரகுமார தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தருவன் (103394) உள்ளிட்டவர்கள் இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த இந்துனில் ஜயவர்தனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை கொழும்பில் உள்ள மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

விசாரணைகள் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்துக்கான காரணம் கண்டறிய முடியாததால் அவரது உடல் உறுப்புகளை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பான பிரேத பரிசோதனையை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி கே. கே. டி. கே. ஜயவீர மேற்கொண்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி