நிதிக் குழுவின் தலைவர் கலாநிதி
ஹர்ஷ டி சில்வா, நிதிக் குழுவின் ஊடாக VFS வீசா கொடுக்கல் வாங்கலில் என்ன நடந்தது என்பதனை
வெளிப்படுத்த முற்படும்போது அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தம்மை அச்சுறுத்துவதாகவும் மத்திய வங்கி ஒப்பந்தத்தை விட இந்த ஒப்பந்தம் அழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வீசா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக் குழு விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும், குழுவொன்று அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல் குறித்து சி.ஐ.டி மூலம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.