அங்குனகொலபலஸ்ஸ பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில்
வசித்துவரும் இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற சண்டையில் கத்தித் தாக்குதலுக்கு இலக்கான எட்டு வயது மாணவன் ஒருவன் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குனகொலபலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்தியால் தாக்கப்பட்ட 8 வயதுடைய பாடசாலைச் சிறுவன் அங்குனகொலபலஸ்ஸ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்தியால் தாக்கியதாகக கூறப்படும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி விஷம் அருந்திய நிலையில் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பக்கத்து வீடுகளில் இருந்த இந்த இரு பாடசாலை மாணவர்களும் ஒன்றாக விளையாடுவதும் கையடக்கத் தொலைபேசியில் கேம் விளையாடுவதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.