நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கொழும்பு

உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைவாக, களனி ஆறு நிரம்பி வழியும் மட்டத்தில் காணப்படுவதுடன், நெடுஞ்சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக களனி, கொலன்னாவை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த நிலை காணப்பட்டது.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளும் முன்னாள் அமைச்சர்களும் கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை தாங்கள் கட்டுப்படுத்தியதாக பெருமையடித்துக் கொண்டிருந்த வேளையில், இவ்வாறானதொரு நிலைமை கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளமை இதில் விசேட அம்சமாகும்.

சில பொறுப்புள்ள அமைச்சர்கள் கடந்த காலங்களில் தாம் முன்னெடுத்த திட்டங்களால் இனி கொழும்பில் வெள்ளம் ஏற்படாது என கூறினர்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அடுத்த சில மணித்தியாலங்களில் பெரும் வெள்ளம் ஏற்படக்கூடும் என சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கொழும்பை அழகுபடுத்தியதாகவும், கொழும்பில் வெள்ளத்தை தடுத்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் செயற்பாடுகளை நாட்டு மக்கள் அறிவர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....