2019 மே 18 இல் யுத்தம் நிறைவடைந்தது. யுத்தம்

நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது. யுத்தமொன்று முடிவடைந்த பின்னர்  சமாதானத்தின் பலனைக் கூட சரிவர இச்சமூகம் பெறவில்லை. சமாதானத்தின் பலன்கள் சரியாக கிடைத்திருந்தால் இங்குள்ள பாடசாலைகள் கூட தேசிய பாடசாலைகளாக மாறியிருக்க வேண்டும். 

பெயர் பலகையுடன் சுருங்கிய தேசியப் பாடசாலைகளை இங்கு நாம் நாடவில்லை. ஆனால் இங்கு அவ்வாறான எதுவும் நடக்கவில்லை. இன்னும் கூட இப்பிரதேசங்களில் யுத்தத்தால் அழிந்து போன பாடசாலைகள் இருக்கின்றன. 

சமாதானம் ஏற்பட்டு 15 வருடங்களாகின்றன. யுத்தத்தை வெற்றி கொண்டதற்காக எத்தனை தடவை வாக்களித்தீர்கள். இன்னும் எமக்கு யுத்தத்தை காரணம் காட்ட முடியாது. இப்பிரதேச பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் நீதி நியாயம் நிலைநாட்டப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத வரலாற்றில், அரசியலால் நம்பிக்கையிழந்து போயுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூய நம்பிக்கையை என்னால் மாத்திரமே வழங்க முடியும். வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் தாம் மாத்திரமே எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்காக சேவைகளை முன்னெடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 202 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், திருகோணமலை, கோமரங்கடவல மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 26 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

டிஜிட்டல் புரட்சியால் நம் நாடு வலுப்பெறும் என்று தலைவர்கள் சொன்னாலும், தகவல் தொழில்நுட்பக் கல்வி முறைசாரா போக்கிலயே இருந்து வருகிறது. இவ்வாறு நடந்து கொண்டு தகவல் தொழில்நுட்பக் கல்விப் போக்கை சரியான முறையில் முன்னெடுக்க முடியாது. பாடசாலைகளில் இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும். இந்த மாற்றம் பாடசாலைகளில் இருந்து ஏற்பட வேண்டும். இளம் சந்ததியினர், இந்நாட்டின் அடுத்த மனித வளம், பாடசாலைகளிலயே இருக்கின்றனர். பிரயோக ரீதியாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதை விடுத்து, வாயளவில் பேசிவருவதில் இந்த டிஜிடல் புரட்சி ஒருபோதும் ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளையும் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் மகளிர் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும். இதன் ஊடாக பெண்கள் கூட தகவல் தொழிநுட்பத்தில் வலுவூட்டப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை எமது ஆட்சியில் நாம் முன்னெடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி