காணிப் பிரச்சினை தொடர்பில் ஆராயச் சென்ற புத்தளம்

பிரதேச செயலாளர்  சம்பத் வீரசேகரவின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தினார் எனக் கூறி  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  பாமின் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (27)  உணவு நேரத்தின்போது மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

P1
புத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிக்குள் சிலர் அத்துமீறி  நுழைந்து வேலிகள் அமைத்து சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொள்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்ற பிரதேச செயலாளர்  மற்றும்   கிராம அலுவலர்களி்ன் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என அலி சப்ரி ரஹீம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு  எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பிரதேச செயலக  ஊழியர்கள் அனைவரும் மதிய உணவு நேரத்தில்  இந்தப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....