'தம்புள்ளை தண்டர்ஸ்' அணிக்குச் சொந்தமான இம்பீரியல்

ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் அனைத்து உரிமைகளும் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டித் தலைவர் சமந்த தொடம்வல தெரிவித்துள்ளார்.

இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமீம் ரஹ்மானுக்கு எதிரான குற்றச்சாட்டை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த தொடம்வாலா, குழுமத்தின் உரிமை வேறு குழுவிற்கு மாற்றப்படும் என்றும் கூறினார்.

2024 சிலோன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமீம் ரஹ்மானை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி