நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட

'Aura Lanka' நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு கோட்டை மேலதிக நீதிவான் பவித்ரா பத்திரராஜா இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட வாதங்களைக்  கருத்திற்கொண்ட நீதிவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இம்முறை LPL போட்டியில் 'தம்புள்ளை' அணியின் உரிமையாளரும்  இவராவார். 

கடந்த வருடம் நடைபெற்ற சிலோன் பிரிமியர் லீக் (LPL) போட்டியில் 'தம்புள்ள Aura' அணியின் உரிமையாளராக இருந்த 'Aura Lanka' நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல இந்த ஆண்டு அணியின் உரிமையிலிருந்து விலகினார்.

மேலும், எல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர்களாக இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குறூப் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்நிறுவனத்தின் இணை உரிமையாளர் பங்களாதேஷை சேர்ந்த தமிம் ரெஹ்மான் மற்றும் கலாம் ரகிப் ஆவார்.

இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்லவிருந்த தமீம் றெஹ்மான் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று (22) கைதுசெய்யப்பட்டதுடன், அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

LPL 2024 வீரர்கள் ஏலத்தில் போட்டிகளை சரிசெய்ய வீரர்களுக்கு பரிந்துரைத்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி