எம்.எஸ்.எம்.ஸாகிர்

இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்
குழுவுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று ( 21) செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.
 
இந்த முதலாவது குழுவில் 68 யாத்திரிகர்கள் பயணமாகினர்.
 
இந்நிகழ்வில் சவூதி அரேபிய  தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இலங்கை ஹஜ் கமிட்டியின்  தலைவர் இப்ராஹிம் சாஹிப் அன்சார் உள்ளிட்ட சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 
 
அங்கு உரையாற்றிய தூதுவர், இராச்சியத்தின் விருந்தினர்களாகச் செல்லும் இலங்கை யாத்திரிகர்களை வாழ்த்தியதுடன் இரு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான முகமத் பின் சல்மான் அவர்களது அரசாங்கம் அல்லாஹ்வின் வீட்டுக்கு வருகை தரும் யாத்ரிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றார். 
 
ஹாஜிகளின் வசதியை உத்தரவாதப்படுத்துவதற்கும், தமது ஹஜ் கிரியைகளை  நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இலங்கை ஹஜ் யாத்ரிகர்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பில், சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் அதிகாரிகள் தூதரகத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி