எதிர்வரும் ஜூன் மாதம் 14 அல்லது

15ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ராஜபபக்க்ஷ குடும்பத்துக்கு நெருக்கமான ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஹிரு' தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், தற்போதைய ஜனாதிபதி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வேட்பாளராக முன்னிறுத்த மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த உதயங்க வீரதுங்க, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருவருக்கே தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி