இலங்கை பொலிஸின் சின்னம் கொண்ட ரீ சேர்ட் அணிந்திருந்த

ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.   ​இலங்கை பொலிஸின் சின்னம் கொண்ட ரீ சேர்ட் அணிந்திருந்த ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.   ​

17 வருடங்கள் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய நிலையில் இடைநிறுத்தப்பட்ட  முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

குறித்த முன்னாள் கான்ஸ்டபிள் தற்போது கட்டுமான நிர்மாண ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிகிறார்.

இவர் கடந்த 14 ஆம் திகதி  இரவு வேலை முடிந்து பலருடன் இரவு உணவு  உட்கொள்வதற்காகன  கொஹுவலவில்  உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் முன்னர் தான் இலங்கை பொலிஸில் கடமையாற்றிய காலத்தில் பெறப்பட்ட பொலிஸ் சின்னம் கொண்ட   ரீ சேர்ட்டை அணிந்திருந்தார் . 

அப்போது அந்த உணவகத்தில் பொலிஸ்  சீருடையில் 2 காணப்பட்ட இரண்டு பொலிஸார் உட்பட 6  பேர் அங்கு உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

பின்னர் , முன்னாள்  பொலிஸ்  சார்ஜண்டிடம், அவர் அணிந்திருந்த பொலிஸ் இலட்சனை கொண்ட ரீ சேர்ட் தொடர்பில் அவர்கள்  விசாரித்துள்ளனர். 

அதற்கு அவர்  தாம் 17 வருடங்களாக பொலிஸ் சேவையில் கடமையாற்றியதாக  தெரிவித்திருந்தார் . 

பின்னர் அந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்டை  கொஹுவல   பொலிஸ் நிலையத்தின் பின்புறத்துக்கு  அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி பொலிஸ் கூண்டில் அடைத்தனர் . 

பின்னர் விடுவிக்கப்பட்ட அவரை ஒப்பந்ததாரர் நிறுவனத்தின் பணியாளர்களால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ,நேற்று (18) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி