நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த

நாவலப்பிட்டி  இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸி ன் சாரதி சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இதனால்  பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவில் பணியாற்றிய சுரங்க அருணசிறி அத்தநாயக்க (39) என்ற இளைஞரே இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில்  உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) மாலை  நுவரெலியாவிலிருந்து திம்புல பத்தனை ஊடாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இந்நிலையில் பஸ்ஸ  நாவலப்பிட்டி நோக்கி செலுத்திக் கொண்டிருந்த போது பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்தனையடுத்து குறித்த  பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் லிந்துல பார்மஸ்டன் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி