இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்

ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் முன்னெடுக்கப்பட்டது.

மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று (15) இரவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து மாவை சேனாதிராஜாவினால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி