கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சுமந்திரன் எம்.பிதான்

காரணம். அவர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கினாலே இந்தப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி எம்.பி.எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (14) இடம்பெற்ற பலஸ்தீனத்தின் இனறைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அம்பாறை மாவட்ட அரச அதிபர் தமிழர்களுக்கு எதிரானவர் என்ற கருத்தை கடந்த பாராளுமன்ற அமர்வில் பேசிய யாழ் எம்.பி.யான கஜேந்திரன் முன்வைத்தார்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு எதிராக அவர் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அதனை நான் நிராகரிக்கின்றேன்.

அம்பாறை மாவட்ட அரச அதிபர் தமிழ்,முஸ்லிம், சிங்களவர் என்ற பேதம் பாராமல் செயற்படும் ஒருவர். அவர் அங்கு சிறந்த சேவையை வழங்குகின்றார். அவர் ஒரு அரச அதிகாரி. சட்டத்துக் குட்பட்டுத்தான் செயற்பட முடியும். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கஜேந்திரன் எம்.பிக்கு அம்பாறை மாவட்டம் பற்றியோ கல்முனை பற்றியோ எதுவுமே தெரியாது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சுமந்திரன் எம்.பி.தான் காரணம். அவர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஒன்றினால்தான் இந்தப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் அரசாங்கத்துக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே இதனை ஒரு இனவாத பிரச்சினையாக மாற்ற வேண்டாம். கல்முனை தமிழ் மக்களுக்கு செயலகம் வழங்குவதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம் என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம் என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி