இரத்தினபுரி முன்னாள் மேயர் டிரோன் அத்தநாயக்கவுக்குச் சொந்தமான

ரிவோல்வர் திருடப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து ஆயிரம் ரூபா பணம் கேட்ட நபர் ஒரவரே இதனைத் திருடிச் சென்றிருக்கலாம் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மேயரின் வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியில் 38 ரக ரிவோல்வர் இருந்ததாகவும், வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது பணம் கேட்டவர் அங்கு இல்லை என்றும் வண்டியை திறந்து பார்த்தபோது, ​​அதிலிருந்த ரிவோல்வர் காணாமல் போனதாகவும் கூறியுள்ளார்.

இரத்தினபுரி மேயராக இருந்தபோது 2021 ஆம் ஆண்டு தமக்கு 38 ரக ரிவோல்வர் கிடைத்ததாகவும், அதன் பெறுமதி சுமார் 48,000 ரூபா எனவும் உரிய முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி