இலங்கையில் பிறந்து விருதுபெற்ற பிரெஞ்சு பேக்கரி தயாரிப்பாளரான தர்ஷன் செல்வராஜ்

பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை் பெற்றுள்ளார்.  

இலங்கையில் பிறந்து விருதுபெற்ற பிரெஞ்சு பேக்கரி தயாரிப்பாளரான தர்ஷன் செல்வராஜ், பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை் பெற்றுள்ளார்.  

இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் சுடர் பாரிஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டு அதற்காக  10,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட விருதுபெற்ற  தர்ஷன் செல்வராஜ் ஒலிம்பிக் சுடரை ஏந்திய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில், பாரம்பரிய பக்கோடா ரொட்டியை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் சிறந்த பேக்கரிக்கான வருடாந்திர விருதை வென்றபோது அவர் புகழ் பெற்றார்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த வெற்றிகளால் இம்முறை ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி