தன்னை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட

தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (10) காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றில் முன்னிலையாகி இந்த மனு தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்கு திகதி வழங்குமாறு கோரினார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனுவை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு அழைக்கப்படும் என்றும், இந்த மனுவை விசாரிப்பது தொடர்பான முடிவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி