இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர்

ரொஷான் குமார சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  உட்பட பல கொலைகளுக்காக பொலிஸ் விசாரணைக்கு தேடப்பட்ட எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவர்  டுபாய் செல்வதற்காக வேறு பெயரில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றி போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது தானியங்கி முக அடையாளம் காணும் முறைமை மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
இவர் எல்பிட்டிய கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர்.
 
நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக மதுரவகே  டில்ஷான் மதுசங்க டி சில்வா என்ற போலிப் பெயரில் போலி கடவுச்சீட்டை தயார் செய்துள்ளார்.
 
இவர் முன்னர் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றி விட்டு வெளியேறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி