உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை

8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பிலான கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆன்மீக தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதாகவும்,

அதன்படி 20ஆம் திகதி பிற்பகல் முதல் 21ஆம் திகதி காலை வரை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து சமய ஊர்வலம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துவிட்டு,

காலை 8.30 மணியளவில் துவாபிட்டிய தேவாலயத்தை இவ் ஊர்வலம் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி