'இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் அமோக ஆணையுடன் தற்போதைய ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டு மக்கள் எவரும் பட்டினியால் வாடாமல் வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கி வருகின்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் அமோக ஆணையுடன் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

நாடு தற்போது பயணிக்கும் பாதையை மாற்ற முற்பட்டால் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகக்கூடும். தனி ஒரு ஆளாக முழு நாட்டையும் பாதுகாக்கக்கூடிய ஆளுமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி