Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர் 17 வயது சிறுவனல்ல, 19 வயது இளைஞன்!

T

The Leader Desk

பிப்ரவரி 11, 2026 • 4:56 AM

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர் 17 வயது சிறுவனல்ல, 19 வயது இளைஞன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரயோகத்தில் உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தற்போது தெளிவுபடுத்தியுள்ளனர்.
  • முன்னதாக, இச்சம்பவத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனே காயமடைந்து யாழ்.
  • எனினும், உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • இதில் காயமடைந்த 19 வயது இளைஞர் யாழ்.
எழுத்து அளவு:

பிரயோகத்தில் உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தற்போது தெளிவுபடுத்தியுள்ளனர்.

முன்னதாக, இச்சம்பவத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனே காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வேன் ஒன்றை மறித்துச் சோதனையிட பொலிஸார் முற்பட்டனர். இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறி வேன் வேகமாகச் சென்றதையடுத்து, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த 19 வயது இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நல்லூர் - சின்ன நகரைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரும், சித்தன்கேணியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞர் 'ஐஸ்' (ICE) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட வேனின் பின் இருக்கைகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், தடயவியல் அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 17.5 கிராம் கேரளா கஞ்சா, வாள், கத்தி, கயிறு மற்றும் மிருகத் தோல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வாகனம் ஊர்காவற்றுறைப் பகுதியில் இடம்பெற்று வரும் கால்நடைத் திருட்டுகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மேற்பார்வையில், யாழ். குற்றத்தடுப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Kayst-van-shooting-1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...