Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இலங்கையின் புதிய மாற்றத்துக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர்!

T

The Leader Desk

பிப்ரவரி 11, 2026 • 4:37 AM

இலங்கையின் புதிய மாற்றத்துக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
  • அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், மோசடி மற்றும் ஊழல்களைத் தடுப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் விரிவான வேலைத்திட்டங்களைப் பாராட்டியதுடன், அதற்காக தனது ஆசிகளையும் வழங்கினார்.
  • இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எழுத்து அளவு:

குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்கள், இலங்கையின் புதிய சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டினார்.

அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், மோசடி மற்றும் ஊழல்களைத் தடுப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் விரிவான வேலைத்திட்டங்களைப் பாராட்டியதுடன், அதற்காக தனது ஆசிகளையும் வழங்கினார்.

மேலும், இலங்கையில் வாழும் போரா சமூகத்தினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்தும், நாட்டின் பொருளாதாரத்திற்கு போரா சமூகத்தினர் வழங்கி வரும் பங்களிப்புகள் குறித்தும் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியிடம் விளக்கினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக தனது கௌரவபூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் போரா சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-02-10_at_8.21.21_AM.jpeg

 

WhatsApp_Image_2026-02-10_at_8.21.20_AM.jpeg

 

WhatsApp_Image_2026-02-10_at_8.21.21_AM_1.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையின் புதிய மாற்றத்துக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர்! | Tamil Leader | We Lead the Nation