ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. எச். நந்தசேன, திடீர் சுகவீனம் காரணமாக இன்று (04) காலமானார்.

 

நீண்டகாலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாக, எம்.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள அதேவேளை, உயிரிழக்கும்போது அவருக்கு 69 வயது என்றும் உறுதிப்படுத்தின.

அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நந்தசேன எம்.பி காலமானதால் வெற்றிடமான அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, விருப்புப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள வீரசேன கமகே நியமிக்கப்பட உள்ளார்.

நீண்ட காலமாக வடமத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரசேன கமகே, அதன் கைத்தொழில் அமைச்சராகவும், பதில் முதலமைச்சராகவும் 7 தடவைகள் பதவி வகித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி