4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரரை சிறைச்சாலையில் பார்க்கச் சென்ற ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் இதற்கு முன்னர் சுகவீனமுற்றிருந்ததாகவும் அதனால் அவரை, சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

"அவர் உண்மையில் நம்மைப் பொறுத்தவரை தவறில்லை. ஆனால் சமூகத்துக்கு எப்படி என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சட்டத்தை மதிப்பதால், சட்டம் எதைக் கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று, தேரர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி