Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல்தாக்கி 107 பேர் உயிரிழப்பு!

T

The Leader Desk

ஜூன் 25, 2020 • 5:40 PM

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல்தாக்கி 107 பேர் உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அம்மாநிலம் முழுவதும் 23 மாவட்டங்களில் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன.
  • உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
  • ஜூன் 22ஆம் தேதியன்று பிகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் எனவும், அம்மாநிலங்களில் உள்ள நதிகளின் நீரோட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது எனவும் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.
  • பிகாரின் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் ப்ரத்யம் அம்ரித், "அனைத்து மாவட்டங்களிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம்.
எழுத்து அளவு:

அம்மாநிலம் முழுவதும் 23 மாவட்டங்களில் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிகாரை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல்தாக்கி சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

ஜூன் 22ஆம் தேதியன்று பிகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் எனவும், அம்மாநிலங்களில் உள்ள நதிகளின் நீரோட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது எனவும் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

"பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் மின்னலால் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற துயர்மிகு செய்தி கேட்டேன். மாநில அரசுகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பேரழிவில் தங்களின் அன்புக்குரியோரை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

மோசமான வானிலை நிலவும் சூழலில் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநில முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிகாரின் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலர் ப்ரத்யம் அம்ரித், "அனைத்து மாவட்டங்களிலும் உயிரிழந்தவர்கள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம். பல மாவட்டங்களில் மின்னலின் தாக்கம் அதிகமாக உள்ளது எனவே சேதங்கள் அதிகமாக இருக்கலாம்,"  என தெரிய வருகின்றது.

"அடுத்த சில தினங்களுக்கு வானிலை மோசமாகதான் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பலத்த மழை பொழியலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிகாரில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்பட்டுள்ளன, நதிகளில் நீரோட்டம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல்தாக்கி 24 உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் உத்தரப் பிரதேத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாகவும் பல இடங்களில் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக டியோரா என்னும் நகரில் பலர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல்தாக்கி 107 பேர் உயிரிழப்பு! | Tamil Leader | We Lead the Nation