Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

செம்மணியில் ஒரே நாளில் எட்டு சிறுவர்களின் மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

T

The Leader Desk

ஜூன் 10, 2026 • 5:43 AM

செம்மணியில் ஒரே நாளில் எட்டு சிறுவர்களின் மனித எலும்புக்கூடுகள் மீட்பு!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இதுவரை 311 மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
  • இலங்கையின் தற்போதைய இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழியின் 74 ஆவது நாள் அகழ்வாராய்ச்சியின் போது தோண்டி எடுக்கப்பட்ட ஒன்பது மனித உடல்களில் எட்டு உடல்கள் சிறுவர்களுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படுவது, 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சற்றோச மனிதப்புதைகுழியாகும்.
எழுத்து அளவு:

 சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இதுவரை 311 மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தற்போதைய இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழியின் 74 ஆவது நாள் அகழ்வாராய்ச்சியின் போது தோண்டி எடுக்கப்பட்ட ஒன்பது மனித உடல்களில் எட்டு உடல்கள் சிறுவர்களுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஜூன் 08 ஆம் திகதி விபரிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 327 மனித உடல்களில் 311 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 100 க்கும் அருகாமையிலான தடையப் பொருட்களுக்குள் (தனிப்பட்ட பாவனைப் பொருட்கள்) கைக்குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் அடங்குகின்றன.

2025இல் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக 2025 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படுவது, 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சற்றோச மனிதப்புதைகுழியாகும்.

chemmani child

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...