முதல் கையெழுத்தாக 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார்.
தவெக ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைத்ததைத் தொடர்ந்து, சென்னை ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று நடைபெற்றது.
அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதலில் பதவிப் பிரமாணமும், அதன்பிறகு ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தொடங்கி பதவியேற்றுக் கொண்ட அவர், ஆண்டவன் மீது ஆணையாக உறுதியேற்கிறேன் எனத் தெரிவித்தார்.
முதலமைச்சரான பின்பு விஜய் 3 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.
பின்னர் முதல்வராகி முதல் உரையாற்றிய விஜய்,
“நான் ஒன்றும் தேவதூதன் அல்ல; சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன். நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. சினிமாவில் எனக்கு மிகப்பெரிய ஓர் இடத்தை நீங்கள்தான் கொடுத்தீர்கள். உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்த என்னை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டீர்கள்.
"இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உறுதி வருகிறது. எனக்கு எவ்வளவோ அவமானங்கள், கஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் உங்கள் கஷ்டங்களாக எடுத்துக் கொண்டீர்கள்.
"என் அரசில் ஒரே அதிகாரம்தான்... பல அதிகார மையங்கள் எல்லாம் இருக்காது. நான் மட்டுமே அதிகார மையம்; வேறு யாரும் அல்ல. எனது ஆட்சியில் ஜெயித்துவிட்டோம் என்று ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். என் அரசில் யார் தவறு செய்தாலும் விடமாட்டேன்.
"ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள். எல்லோரும் சேர்ந்து புதிய ஆட்சியைத் தருவோம். மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தொட மாட்டேன். முன்பு இருந்த அரசு கஜானாவை சுத்தமாகக் காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.
"கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். போதைப் பொருள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்தான் முழுக் கவனம் செலுத்துவேன்” என்றார்.
சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு தமிழக முதல்வராக ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் விஜய்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைத்தது. புதிய அரசு பதவியேற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. கோட் சூட் அணிந்து, தமிழக முதல்வராக, இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார். அவருக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜோசப் விஜய் என்னும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்று கொண்டார் விஜய். அவர் ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். விசில் சத்தம் விண்ணை பிளந்தது. தமிழகத்தில் ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை, இதுவரை, 12 முதல்வர்கள் இருந்துள்ளனர். நபர்கள் அடிப்படையில், 13வது முதல்வராக விஜய் பதவியேற்றார்.
முன்னதாக, நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் பலத்த பாதுகாப்புடன் வந்தார். வழிநெடுகிலும் விஜய்க்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை பார்த்து விஜய் காரில் இருந்த படியே கை அசைத்தார். கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து, பதவியேற்பு விழாவுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தார் விஜய்; அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டது இதுவே முதல் முறை.
செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
video
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை, கூட்டணி கட்சித் தலைவர்கள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அவருக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவளித்தன. விசிக நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது. அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை விட அதிகமாக ஆதரவு கிடைத்தது.
நேற்று மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். அப்போது, 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.
தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கு திரிஷாவும், திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனும் வந்திருந்தார்கள். அவர் அரங்கத்துக்குள் வந்தபோது ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகமாக குரல் எழுப்பினார்கள். அவரும் ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபாவை பார்க்கவில்லை. முக்கியமாக அவர்கள் இரண்டு பேரும் திரிஷாவின் என்ட்ரியை பார்த்து கொஞ்சம் அப்செட் ஆனது அவர்களது ரியாக்ஷன்களில் அப்செட் ஆனது தெரிந்தது.
முன்னதாக விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி நடிகை ஒருவருடன் அவர் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அவர் கூறிய நடிகை திரிஷாதான் என்று எல்லோரும் சந்தேகப்பட்ட நிலைமையில், விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு வந்திருந்தது பெரிய பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


