உள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களும் 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாயத் தொடங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி ஹேரத் இது குறித்து வழங்கிய தகவல்கள் வருமாறு:
வான்பாயும் முக்கிய நீர்த்தேக்கங்கள்:
-
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர
-
மொனராகலை மாவட்டத்தின் வெஹெரகல
-
அநுராதபுர மாவட்டத்தின் ராஜாங்கனை
-
குருநாகல் மாவட்டத்தின் தெதுரு ஓயா
திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள் மற்றும் நீர் வெளியேற்றம்:
-
லுணுகம்வெஹெர நீர்த்தேக்கம்: 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விநாடிக்கு 4,000 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
-
வெஹெரகல நீர்த்தேக்கம்: 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு 1,400 கன அடி நீர் மாணிக்க கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.
-
ராஜாங்கனை நீர்த்தேக்கம்: 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு 9,300 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
-
தெதுரு ஓயா நீர்த்தேக்கம்: 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு 5,500 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
-
அலிகொடஆர நீர்த்தேக்கம்: 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு 500 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை:
நீர்த்தேக்கங்களுக்குக் கிடைக்கும் நீரின் அளவு மற்றும் எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப, வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாற்றமடையக்கூடும்.
எனவே, இந்த நீர்த்தேக்கங்களுக்குக் கீழே உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள மக்களும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளால் அவ்வப்போது வெளியிடப்படும் வான் கதவுகள் திறப்பு மற்றும் நீர் மட்டம் தொடர்பான அறிவித்தல்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.


