நேரிடும் என, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று எச்சரிக்கை விடுத்தார்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களிடம் மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் லஞ்சம் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, அமைச்சரின் கூற்றுக்குப் பதிலளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் முயன்ற போதிலும், அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.
இது நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சபாநாயகருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. இந்த அமளிக்கு மத்தியிலேயே சபாநாயகர் குறித்த எச்சரிக்கையை விடுத்தார்.


