Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தனியார் பல்கலைக்கழக மாணவர் கொலை: மேலும் பல தகவல்கள் வெளியீடு!

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2026 • 6:56 AM

தனியார் பல்கலைக்கழக மாணவர் கொலை: மேலும் பல தகவல்கள் வெளியீடு!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (09) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • அந்த விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன.
  • இதனை அவதானித்த அந்த மாணவியின் நண்பர் (உயிரிழந்த மாணவர்), மாணவியின் பின்னால் சென்ற மாணவரைத் தாக்கியுள்ளார்.
எழுத்து அளவு:

ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (09) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன.

எனினும், அதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவில் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயுள்ள ஓரிடத்தில் தனிப்பட்ட முறையில் விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மாணவி ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். இதன்போது மாணவர் ஒருவரும் அவர் பின்னால் சென்றுள்ளார். இதனை அவதானித்த அந்த மாணவியின் நண்பர் (உயிரிழந்த மாணவர்), மாணவியின் பின்னால் சென்ற மாணவரைத் தாக்கியுள்ளார்.

இதன்போது, தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் நண்பர்கள் குழுவொன்று ஒன்றுசேர்ந்து, தாக்கிய மாணவனை (மாணவியின் நண்பனை) கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த மாணவர், ஹோட்டல் ஊழியர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...