Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தமிழகத் தேர்தலுக்கு முன்னதாக விஜய்யின் வெளியாகாத 'ஜன நாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிவு!

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2026 • 6:46 AM

தமிழகத் தேர்தலுக்கு முன்னதாக விஜய்யின் வெளியாகாத 'ஜன நாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காட்சிகள் இணையத்தில் லீக் ஆன நிலையில் அது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ஜனநாயகன் படத்திற்கு கூட்டுச் சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
  • சுமார் 5 நிமிடத்துக்கு மேலான வீடியோ வேகமாக பரவி வருகிறது.
  • தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது.
எழுத்து அளவு:

காட்சிகள் இணையத்தில் லீக் ஆன நிலையில் அது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை.

நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ஜனநாயகன் படத்திற்கு கூட்டுச் சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த சூழலில், விஜயின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. சுமார் 5 நிமிடத்துக்கு மேலான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

அதேபோல், ஜனநாயகனின் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சிகளும், படத்தின் அறிமுக காட்சியும் என சுமார் ஐந்து நிமிட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த சூழலில், விஜயின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. சுமார் 5 நிமிடத்துக்கு மேலான வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதேபோல், ஜனநாயகனின் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சிகளும், படத்தின் அறிமுக காட்சியும் என சுமார் ஐந்து நிமிட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

‘ஜனநாயகன்’ படம் லீக் செய்யப்பட்ட விஷயம் தொடர்பாக அப்பட இயக்குநர் எச்.வினோத் பேசியிருக்கிறார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்பே அது கசிவது உண்மையிலேயே வேதனையானது. தயவுசெய்து அதைப் பகிராமல் ஆதரவளியுங்கள்." என்று வேதனையாக பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, கே.வி.என் புரொடக்ஷன்ஸ் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், "பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

'ஜன நாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன.

ஜன நாயகன் திரைப்படத்தின் லீக் ஆன காட்சிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்." என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...