பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், ஒலி மாசடைவதைக் குறைப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பஸ்களுக்குள் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் மூலம் ஏற்படும் ஒலி மாசடைவு தொடர்பான விதிமுறைகள் இதுவரை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை எனவும், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தற்போது அந்த விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு அதன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், ஸ்பீக்கர்களிலிருந்து வெளியாகும் சத்தம் தொடர்பில் சட்டவிதிமுறைகளை நடைமுறைப்படுத்த முடியும் என பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.


