Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மட்டக்களப்பில் 10வது நாளாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரதம் தொடர்கிறது!

T

The Leader Desk

மார்ச் 12, 2021 • 4:04 PM

மட்டக்களப்பில் 10வது நாளாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரதம் தொடர்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
  • அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 03ம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று 10வது நாளாகவும் தொடர்கிறது.
  • இன்று அதிகாலை 2.30 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வவர் ஆலயத்தின் முன் இருந்த உண்ணாவிரதப் போராட்ட கொட்டகை மற்றும் பதாதைகள் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 03ம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று 10வது நாளாகவும் தொடர்கிறது.
 
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த போராட்டத்தில்
இன்றைய போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மதகுருமார், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமிழ் உணர்வாளர் அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
 
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வவர் ஆலயத்தின் முன் இருந்த உண்ணாவிரதப் போராட்ட கொட்டகை மற்றும் பதாதைகள் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
 
இதே வேளை போராட்டக்காரர்களின் கொட்டகை மற்றும் பதாதைகள் அகற்றப்பட்டதையடுத்து இன்று காலை முதல் சுடும் வெயிலிலும் தமது உணவுதவிர்ப்பு சுழற்சி முறையிலான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்.
 
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.சிவயோகநாதன் மற்றும் வண.பிதா.கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்
 
IMG-20210312-WA0025.jpg
 
1111.jpg
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மட்டக்களப்பில் 10வது நாளாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரதம் தொடர்கிறது! | Tamil Leader | We Lead the Nation