Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நீர்ப்போசன பிரதேசத்திற்கு தீ வைப்பு - 10 ஏக்கர் நாசம்!

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2023 • 7:51 AM

நீர்ப்போசன பிரதேசத்திற்கு தீ வைப்பு - 10 ஏக்கர் நாசம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீர்ப்போசன வனப் பிரதேசத்திற்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் 10 ஏக்கர் வரையுள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.
  • குறித்த பகுதியிலிருந்தே சாந்திபுரம், சமாதானபுரம், நேத்ரா பிளேஸ், கொட்டகலை, கொமர்ஷல் உள்ளிட்ட பகுதியில் வாழும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினைப் பெற்றுக்கொள்கின்றன.
  • இதனால் எதிர்காலத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எழுத்து அளவு:

நீர்ப்போசன வனப் பிரதேசத்திற்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் 10 ஏக்கர் வரையுள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீக்காரணமாக தொலைபேசி வயர்களுக்கும் மின் வயர்களுக்கும் மற்றும் குடிநீரக் குழாய்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலிருந்தே சாந்திபுரம், சமாதானபுரம், நேத்ரா பிளேஸ், கொட்டகலை, கொமர்ஷல் உள்ளிட்ட பகுதியில் வாழும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினைப் பெற்றுக்கொள்கின்றன. இதனால் எதிர்காலத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேநேரம் குறித்த வனப்பகுதியில் எமது நாட்டுக்கு உரித்தான பறவையினங்கள், மான், மரை, பன்றி, முயல் உள்ளிட்ட பிராணிகளும் வாழ்ந்து வருகின்றன. இந்த தீ காரணமாக இவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

வறட்சியின் போது மக்கள் சிந்திக்காமல் செய்யும் விஷமத்தனமான செயல்கள் காரணமாக உயிரினங்களும் பொதுமக்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று தீ வைக்கப்பட்ட போது இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளும் திம்புள்ள பத்தனை பொலிஸாரும் வந்து பார்வையிட்டதாகவும் தீயினைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கும் இதேவேளை, தீ வைப்பதை கட்டுப்படுத்துவதற்கு தீவைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலமே முழுமையாக இவ்வாறான செயல்களைக் கட்டுப்படுத்த முடியுமென பொதுமக்கள் சுட்டடிக்காட்டுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...