திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் திகதி இடப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை பெற கடந்த செவ்வாய் கிழமை (28) வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரினர்.
இதன்போது மன்றில் இருந்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், குறித்த விக்கிரகங்களை உடைத்தமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கு மன்று உத்தரவு இட வேண்டும் எனவும் கோரினர்.
சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்ற வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபாசினி தேவராசா உடனடியாக விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு, இம்மாதம் 30 திகதி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குற்றவாளிகளை கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் நேற்று (30) மன்றில் தோன்றிய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், குறித்த வெடுக்குநாறிப் பகுதி தொலைபேசி அலைவரிசை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் பொலிஸார் மன்றின் அனுமதி கோரினர்.
இதனை அடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றால் திகதி இடப்பட்டது.
ஆலய விக்கிரகம் உடைப்பு - வழக்கு விசாரணை 10 ஆம் திகதி!
T
The Leader Desk
மார்ச் 31, 2023 • 4:05 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் திகதி இடப்பட்டுள்ளது.
- வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை பெற கடந்த செவ்வாய் கிழமை (28) வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரினர்.
- இதனடிப்படையில் நேற்று (30) மன்றில் தோன்றிய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், குறித்த வெடுக்குநாறிப் பகுதி தொலைபேசி அலைவரிசை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் பொலிஸார் மன்றின் அனுமதி கோரினர்.
- இதனை அடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றால் திகதி இடப்பட்டது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

