குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (Disaster Management Centre) தகவல்களின்படி, நாடு முழுவதும் 192 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், 52 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் 5 பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலவும் அனர்த்தங்கள் காரணமாக இதுவரை இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.
தாழமுக்கம் படிப்படியாக பலவீனமடைகிறது:
இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (தாழமுக்கம்) படிப்படியாகப் பலவீனமடைந்து வருவதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த வானிலை தொகுதியின் செல்வாக்கு காரணமாக மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் படிப்படியாகப் பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், மழையுடனான வானிலையும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று (17) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இப்பிரதேசங்களில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


