Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தொடரும் சுரேஷ் சலேவின் உணவுத்தவிர்ப்பு; போராட்டத்தைக் கைவிட நிபந்தனைகள் விதிப்பு!

T

The Leader Desk

ஜூன் 9, 2026 • 5:40 AM

தொடரும் சுரேஷ் சலேவின் உணவுத்தவிர்ப்பு; போராட்டத்தைக் கைவிட நிபந்தனைகள் விதிப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்ந்து உணவருந்தாமல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • நேற்று (08) அவரது குடும்ப உறவினர்களுக்கும் சட்டத்தரணிக்கும் அவரைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இதன்போது தான் தொடர்ந்து உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுரேஷ் சலே தெரிவித்துள்ளார்.
  • சுரேஷ் சலேவின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி.
  • மேலும், சுரேஷ் சலேவின் நிலைமை குறித்துக் கண்டறிவதற்காக நேற்று (08) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

தொடர்ந்து உணவருந்தாமல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (08) அவரது குடும்ப உறவினர்களுக்கும் சட்டத்தரணிக்கும் அவரைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இதன்போது தான் தொடர்ந்து உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுரேஷ் சலே தெரிவித்துள்ளார்.

தன் மீதான விசாரணைகளில் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளரை நீக்குமாறும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறும் கோரியே அவர் இவ்வாறு உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு அநாகரிகமாக மற்றும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதற்குக் எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சிலவற்றால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு முழுவதும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிடுகையில், என்ன தடைகள் ஏற்பட்டாலும் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

இந்த சத்தியாக்கிரகத்தில் இணைந்துகொண்ட சர்வஜன அதிகாரத்தின் உப தலைவர் அனுராதா யஹம்பத் குறிப்பிடுகையில், சலே விடுவிக்கப்படும் வரை இந்த சத்தியாக்கிரகம் தொடரும் என்றும், இது நாட்டுக்காகப் போராடிய இராணுவத்தினருக்கு இழைக்கப்படும் பெரும் அவமானம் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சுரேஷ் சலே தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி குறிப்பிடுகையில், சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தின் கீழ் உள்ள ஒரு விடயமாகும் என்பதால் யாரும் பதற்றமடையத் தேவையில்லை எனக் கூறினார்.

நீதிமன்றத்தின் மூலம் இது முறையாகத் தீர்க்கப்படும் என்றும், யாருக்கு எதிராகவும் அரசாங்கம் பழிவாங்கும் நோக்குடன் செயல்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சலே குறித்த விசாரணை; சிஐடிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு அமைய விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேவின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த நாட்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், சுரேஷ் சலேயிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதுடன், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூண்டுக்கு அருகில் இருந்த ஏனைய சந்தேகநபர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சுரேஷ் சலேவின் நிலைமை குறித்துக் கண்டறிவதற்காக நேற்று (08) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தங்களால் அன்றைய தினம் வர முடியாது எனத் தெரிவித்து அவர்கள் வேறு ஒரு திகதியைக் கோரியிருந்தனர்.

இதற்கமைய, குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தொடரும் சுரேஷ் சலேவின் உணவுத்தவிர்ப்பு; போராட்டத்தைக் கைவிட நிபந்தனைகள் விதிப்பு! | Tamil Leader | We Lead the Nation