Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட்ட நிலையில் ஆறு மனித உடல்கள்!

T

The Leader Desk

ஜூன் 9, 2026 • 5:19 AM

செம்மணி மனிதப்புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட்ட நிலையில் ஆறு மனித உடல்கள்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைக்குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பாடசாலைப் பைகளும் மீட்பு!
  • இலங்கையின் தற்போதைய இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழியின் 73ஆவது நாள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட 16 மனித உடல்களில், ஆறு உடல்கள் ஒரே கூட்டமாக (ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட்ட நிலையில்) காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிரஞ்சன் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 318 மனித உடல்களில் 302 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படுவது, 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சற்றோச மனிதப்புதைகுழியாகும்.
எழுத்து அளவு:

 கைக்குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பாடசாலைப் பைகளும் மீட்பு!

இலங்கையின் தற்போதைய இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழியின் 73ஆவது நாள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட 16 மனித உடல்களில், ஆறு உடல்கள் ஒரே கூட்டமாக (ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட்ட நிலையில்) காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 318 மனித உடல்களில் 302 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 19ஆவது நாளான ஜூன் 08 ஆம் திகதி திங்கட்கிழமை 4 மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதுடன், நேற்று (08) புதிதாக வெளிப்பட்ட மனித உடல்களுக்கு மத்தியில் சிறுவர்களின் எலும்புப் பகுதிப் எச்சங்களும் காணக்கூடியதாக இருந்ததாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 100 க்கும் அருகாமையிலான தடையப் பொருட்களுக்குள் (தனிப்பட்ட பாவனைப் பொருட்கள்) கைக்குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் அடங்குகின்றன.

2025 இல் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக 2025ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படுவது, 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சற்றோச மனிதப்புதைகுழியாகும்.

chemmani 300 6 09

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

செம்மணி மனிதப்புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகப் போடப்பட்ட நிலையில் ஆறு மனித உடல்கள்! | Tamil Leader | We Lead the Nation