Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

'இன்றைக்குள் பிரச்சினை தீராவிட்டால்..!'; விஜய் அதிரடி அறிவிப்பு!

T

The Leader Desk

மே 9, 2026 • 5:58 AM

'இன்றைக்குள் பிரச்சினை தீராவிட்டால்..!'; விஜய் அதிரடி அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை.
  • பதறிப்போன அவரது ஆலோசகர்கள், அப்படி அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
  • பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை.
எழுத்து அளவு:

யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. மீண்டும் மக்களிடமே போவேன்' என விஜய் உரத்த குரலில் சொன்னதாக, தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

'மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்பினேன். கொஞ்சம் குறைந்து விட்டது. என்னை போலவே ஜாதி, மத, ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட சிறு கட்சிகள் ஆதரவு தரும் என எதிர்பார்த்தேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் பதவியை எதிர்பார்க்காமல் ஆதரவை தெரிவித்தனர். ஆதரவு தருவதாக அவர்களிடம் வாக்களித்த திருமாவளவன், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை அடுக்குகிறார்.

ஸ்டாலின் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார்' என்று விஜய் விரக்தியில் பேசியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 'அரசியல் பற்றி எனக்கும் தெரியும். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு எதிரக இப்படி எல்லோரும் எனக்கு எதிராக அணி திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை' என விஜய் தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

'ஆட்சி அமைப்பதற்கு முன்பே ஆயிரம் நிபந்தனை விதிப்பவர்கள், பதவி பிரமாணம் எடுத்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. அப்படி ஒரு ஆட்சி அமைக்கத்தான் வேண்டுமா? பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு, தமிழக மக்களிடமே திரும்ப போய், முழுசா ஆதரவு தாருங்கள் என்று கேட்டால் மறுக்கவா போகிறார்கள்?' என விஜய் கேட்டுள்ளார்.

பதறிப்போன அவரது ஆலோசகர்கள், அப்படி அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

'நமக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. சுப்ரீம் கோர்ட் நம்மை கைவிடாது. மற்ற கட்சிகளிலும் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவார்கள்' என்று ஒரு ஆலோசகர் கூறியுள்ளார்.

சொந்த அண்ணனும், அண்ணனின் மகனும் சேர்ந்து மக்களின் தீர்ப்பை மாற்ற சதி செய்வதற்கு எதிராக தலைவரின் தங்கையே பொங்கி எழுந்த தகவலை இன்னொரு ஆலோசகர் சுட்டி காட்டியுள்ளார்.

'ஒன்றே முக்கால் கோடி மக்களின் ஓட்டுகளை வீணாக்கி விட கூடாது. நீங்கள் ஒதுங்கினால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பவே நீங்கள் எதிர்க்கும் சக்திகள் காத்திருக்கின்ரன. அந்த வலையில் விழ வேண்டாம்' என ஒருவர் சொல்லியிருக்கிறார்.

'எந்த வழியும் பிடிக்கவில்லை என்றால், எதிரிகளே ஆட்சி அமைக்கட்டும் என விட்டு விட்டு, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அமரலாம். உங்களை மீறி அந்த அரசால் எதுவும் செய்ய முடியாது. அதிலேயே மக்களின் விருப்பத்தை பெருமளவு பூர்த்தி செய்ய முடியும்' என மற்றொருவர் கூறியுள்ளார்.

யாருக்கும் பதில் சொல்லாமல் விஜய் மவுனம் சாதிப்பதால், உடன் இருப்பவர்கள் டென்ஷனில் உள்ளனர் என த வெ க வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...