Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

விசேட மின் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் இன்று!

T

The Leader Desk

மே 9, 2026 • 4:19 AM

விசேட மின் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் இன்று!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • இது தொடர்பான வாய்மூல கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பமும் அண்மையில் நிறைவடைந்தது.
  • இதேவேளை, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
  • இதன்போது மின்சாரக் கட்டணங்கள் 8% முதல் 14.4% வரையான சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திருத்தப்பட்ட மின் செலவு மதிப்பீட்டை நேஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர் நிறுவனம் அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மின் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளமையே இந்தக் கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாய்மூல கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பமும் அண்மையில் நிறைவடைந்தது.

எவ்வாறாயினும், தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நஷ்டத்தை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்போது மின்சாரக் கட்டணங்கள் 8% முதல் 14.4% வரையான சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...