இனிப்புப் பலகாரங்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் நிலவும் தற்போதைய விலை நிலவரங்களின்படி, பலகாரங்களின் புதிய விலைகள் பின்வருமாறு:
புதிய விலை விபரங்கள்:
-
ஆஸ்மி (Aasmi): 180 ரூபா முதல் 200 ரூபா வரை.
-
கொண்டை கெவுன் (Konda Kavum): 90 ரூபா முதல் 100 ரூபா வரை.
-
ஜாங்கிரி (Pani Walalu): 100 ரூபா.
-
பயத்தம் பணியாரம் (Mun Kavum): 80 ரூபா.
-
கொக்கிஸ் (அச்சு முறுக்கு) (Kokis): 40 ரூபா.
-
அலுவா (Aluva): 70 ரூபா.
-
அதிரசம் (Athirasa): 80 ரூபா.
-
தேங்காய்ப் மிட்டாய் (Coconut Toffee): 20 ரூபா.
மூலப்பொருட்களின் விலை உயர்வு:
இனிப்புப் பலகார உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தேங்காய் எண்ணெய்ப் போத்தல் ஒன்றின் விலை 700 ரூபா முதல் 750 ரூபா வரை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் கேக் வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. சந்தையில் தற்போது ஒரு கிலோ கிராம் பட்டர் கேக் (Butter Cake) 1,000 ரூபா முதல் 1,200 ரூபா வரையான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பால், இம்முறை சித்திரை புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தயாராகும் மக்கள், பாரம்பரியப் பலகாரங்களைக் கொள்வனவு செய்வதில் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
இது இம்முறை புத்தாண்டு உற்சாகத்தைக் குறைத்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.


