Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வடக்குக்கான ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பம்!

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2026 • 3:49 AM

வடக்குக்கான ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வரையான ரயில் சேவைகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
  • கடந்த காலங்களில் தீவைத் தாக்கிய “டித்வா” (Ditwa) சூறாவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டிருந்தன.
  • இதனால் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
  • எனினும், ஜனவரி 19ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
எழுத்து அளவு:

வரையான ரயில் சேவைகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் நகரிடை (Intercity) ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு தபால் ரயில் ஆகியன இன்றைய தினம் முதல் தமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

அத்துடன், யாழ்தேவி ரயில் நாளை முதல் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் தீவைத் தாக்கிய “டித்வா” (Ditwa) சூறாவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டிருந்தன.

இதனால் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

எனினும், ஜனவரி 19ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தற்போது சேதமடைந்த 14 இடங்களும் நிரந்தரமாக புனரமைக்கப்பட்டுள்ளதையடுத்து, இன்றைய தினம் முதல் வழமை போன்று ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...