Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மியன்மார் அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை!

T

The Leader Desk

பிப்ரவரி 9, 2026 • 6:39 AM

மியன்மார் அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்மையில் தாக்கிய 'டிட்வா' (Ditwa) சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கோடனேயே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த அரிசித் தொகுதியை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (09) நடைபெற்றது.
  • இதன்போது தூதுவரினால் அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் அரிசித் தொகுதி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
  • இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, 'டிட்வா' சூறாவளியின் தாக்கத்தினால் இந்நாட்டின் மொத்த விவசாய நிலங்களில் 20 சதவீதமானவை அழிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

அண்மையில் தாக்கிய 'டிட்வா' (Ditwa) சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கோடனேயே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரிசித் தொகுதியை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (09) நடைபெற்றது. இதில் இலங்கையிலுள்ள மியன்மார் தூதுவர் மார்லர் தான் டைக்கும் (Marlar Than Htaik), வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டனர். இதன்போது தூதுவரினால் அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் அரிசித் தொகுதி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, 'டிட்வா' சூறாவளியின் தாக்கத்தினால் இந்நாட்டின் மொத்த விவசாய நிலங்களில் 20 சதவீதமானவை அழிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவிகளுக்கு மேலதிகமாக, மியன்மார் அரசாங்கம் இந்த 500 மெட்ரிக் தொன் அரிசியை மனிதாபிமான அடிப்படையில் நன்கொடையாக வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...