செய்யப்படுகிறது. இதனால் ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி நாளை ரிலீஸ் ஆகிறது.
'நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், இன்று (ஜனவரி 09) தியேட்டர்களில் வெளியாகும்' என படக்குழு அறிவித்திருந்தது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சென்சார் போர்), படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இந்த பிரச்னை காரணமாக 'ரிலீஸ்' நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக் ஷன்ஸ் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியானது.
தீர்ப்பில் நீதிபதி ஆஷா கூறியிருப்பதாவது: விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும். மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார். மேலும் அவர் கூறியதாவது:
- ஒரு உறுப்பினர் புகாரை கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும்?
- தணிக்கைக்குழுவின் திருத்தங்களை படக்குழு மேற்கொள்ள வேண்டும்.
- புகார் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்டு உள்ளது, தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
- பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் தணிக்கை சான்று வழங்கியாக வேண்டும்.
- படத்திற்கு யுஏ சான்று வழங்கியதும் தலைவருக்கான அதிகாரம் முடிந்தது.
- தணிக்கை குழு தலைவர் அதிகாரத்தை மீறி மறு ஆய்வுக்கு அனுப்பியதால் நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளது.
- பெரும்பான்மை உறுப்பினர்கள் முதலில் எடுத்த முடிவின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன் மேல் முறையீடு செய்யப்படுகிறது. இதனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது.


