கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையே இதற்குக் காரணமாக அமைந்தது. 6ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு பாடத் தொகுதியில் (Module) தவறான இணையத்தள இணைப்பு (Web link) ஒன்று உட்படுத்தப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் பதவி விலக வேண்டும் எனச் சிலரும், குறிப்பாக எதிர்க்கால அரசியல்வாதிகளும் பெரும் கருத்தியலை உருவாக்க முயன்றனர். இதன் விளைவாக ஜனாதிபதி, கல்வி அமைச்சர் மற்றும் கல்விச் செயலாளர் ஆகியோர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் சூழல் உருவானது.
இந்தச் சம்பவத்தால் அரசாங்கம் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், இதன் காரணமாகவே பிரதமரை நீக்கும் நோக்கில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் வதந்திகள் வேகமாகப் பரவின.
எனினும், தற்போதைக்கு அத்தகைய அமைச்சரவை மாற்றம் எதுவும் அவசியமில்லை என ஆளும் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஞ்ஞான ரீதியான முறைமையின் கீழ், ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் தேவையான மாற்றங்களுடன் சில மாதங்களுக்கு முன்னரே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதாகவும், மீண்டும் அத்தகைய ஒரு மாற்றம் தற்போதைக்குத் தேவையில்லை எனவும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


