Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'2026 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் மேலும் 31இ000 வீடுகள் நிர்மாணிக்கப்படும்!'

T

The Leader Desk

ஜனவரி 9, 2026 • 6:56 AM

'2026 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் மேலும் 31இ000 வீடுகள் நிர்மாணிக்கப்படும்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துங்கம, அலுபெத்த சந்தியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • 'டித்வா' சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், ஒரு வீட்டை அமைப்பதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.
  • அங்கு ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
எழுத்து அளவு:

வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துங்கம, அலுபெத்த சந்தியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'டித்வா' சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், ஒரு வீட்டை அமைப்பதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றினார்.

அங்கு ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அதேபோல், முழுமையாக சேதமடையாவிட்டாலும் பாதியளவு சேதமடைந்த மற்றும் வசிக்கத் தகுதியற்ற இடங்களாக அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 17,000 - 18,000 வீடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் இறுதி அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை. எனவே, நாம் தோராயமாக 20,000 - 25,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, 2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமது 'ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு' எனும் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள வறியவர்களைத் தெரிவு செய்து, கிராம மக்களின் உதவியுடன் 10,000 வீடுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். வீடமைப்பு அதிகார சபையினால் மாத்திரம் சுமார் 10,000 வீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. 2009 இல் யுத்தம் முடிவடைந்தும் இன்னும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கென 2,500 வீடுகளை அமைக்க தலா 20 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கியுள்ளோம். அதேபோல், பெருந்தோட்ட சமூகத்திற்காக இந்திய உதவியுடன் அரசாங்கம் வீடுகளை அமைக்க முன்மொழிந்துள்ளது. இவ்வாறாக 31,000 வீடுகளை அமைக்கத் திட்டமிட்டிருந்த வேளையிலேயே, இந்த அனர்த்தம் காரணமாக மேலும் 20,000 - 25,000 வீடுகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வீடுகளை இழந்தவர்களுக்கு அவர்கள் முன்னர் இருந்ததை விடவும் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அதற்காக ஒரு வீட்டை அமைக்க 50 இலட்சம் ரூபா வழங்கத் தீர்மானித்துள்ளோம். முதற்கட்டமாக 20 இலட்சமும், பின்னர் இரு கட்டங்களாக தலா 15 இலட்சம் ரூபா வீதமும் வழங்கப்படும். நிதியைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படாது. 2-3 மாதங்களுக்குள் இந்த வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும்.

பாதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளோம். நாம் இருந்த நிலையிலேயே இருக்க வேண்டியதில்லை, அதைவிட முன்னேற வேண்டும். இன்று முதற்கட்டமாக 26 பேருக்கு 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குகிறோம்.

எமக்கு சில அடிப்படை உரிமைகள் உள்ளன:

சிறந்த வருமான வழி.

பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி.

ஆரோக்கியமான வாழ்வு.

சிறந்ததொரு நிழல் (வீடு).

மன அமைதி.

குறைந்தது இந்த 5 விடயங்களாவது நிறைவேறாவிட்டால் நாம் மனிதர்களாக வாழ்வதில் அர்த்தமில்லை" என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...